Pages

Thursday, August 26, 2010

சுதந்திரநாடு சோத்துக்கு கேடு

நாம் இருப்பது சுதந்திரநாட்டில் அனைவரும் சுதந்திரமாக இருக்கின்றோமா என்றால் நிச்சயம் சுதந்திரமாகத்தான் இருக்கிறோம் இதில் மாற்று கருத்துக்கு இடமில்லை. நமது முன்னோர்கள் அவர்களின் சுயநலமில்லாமல் நமக்கு பின் வரும் சந்ததியினர் சுதந்திரமாக வாழவேண்டும் என அடி உதை பட்டு ஆங்கிலேயரிடமிருந்து வாங்கப்பட்டது சுதந்திரம். அவர்கள் வாங்கித்தந்த சுதந்திரத்தால் தான் நாம் சுதந்திரமாக இருக்கிறோம்.

சுதந்திரமாக நாம் என்ன செய்கின்றோம் என்றால் நிறைய செய்கிறோம் நமக்கு பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற நிறைய உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளது. நாம் யாரைப்பற்றி வேண்டுமானலும் திட்டலாம், அவர்களும் நம்மை திட்டலாம் இது ஒரு வகை சுதந்திரம். வலைபதிவுகளில் தமிழக அரசியல் தலைவர்கள் முதல் டெல்லி அரசியல் தலைவர்கள் வரை அனைவரையும் திட்டியும், பாராட்டியும் எழுதுகிறோம் இது நமது சுதந்திரம், திட்டு வாங்கியர்கள் நமக்கு ஆட்டோவில் ஆள் அனுப்பலாம் அது அவர்கள் சுதந்திரம்.

இன்னும் பல சுதந்திரங்கள்

தண்ணி அடித்துவிட்டு சுதந்திரமாக வாகனம் ஓட்டுவது. காவலரிடம் மாட்டினால் 100 கொடுத்து மீண்டும் சுதந்திரத்தை பெறுவது.

சிக்னல் விழுகும் போது குறுக்கே வாகனத்தை ஓட்டுவது. வெள்ளை கோட்டைத்தாண்டி வண்டியை நிறுத்துவது.

பரிசு கொடுத்து பல காரியங்களை செய்வது.

சுதந்திரமாக நடப்பது, ஓடுவது என பல வகையில் சுதந்திரத்தை அனுபவிக்கிறோம். வளர்ந்த நாடுகளில் இல்லாத சுதந்திரம் நமக்கு இருக்கிறது வாகனத்தில் செல்லும் போது உச்ச வந்தால் வாகனத்தை ஓரம் நிறுத்தி உச்ச போவது என சொல்லிக்கொண்டே போகலாம்.

சோத்துக்கு கேடு

இச்சுதந்திர நாட்டில் நாம் வாழும் சுக வாழ்க்கை இன்னும் 5 அல்லது 10 ஆண்டுகளில் நமக்கு சோத்துக்கு வழி இல்லாமல் இருக்கப்போகிறோம். உணவுப்பண்டங்களை ஏற்றுமதி செய்த நாம் இனி இறக்குமதி செய்தால் தான் சோறு இல்லை எனில் நம் சோத்துக்கு கேடு தான். இன்று நம் நாட்டின் முக்கிய தொழில் விவசயாம் தான் இதில் நமக்கு பல பிரச்சனைகள் உண்டு அனைத்தையும் பின் தள்ளி நம் விவசாயிகள் உற்பத்தி செய்து கொண்டு தான் இருக்கிறார்கள் அதனால் தான் சுதந்திரமாக என்ன வேண்டுமோ அதை சாப்பிட முடிகிறது. இல்லை என்றால் ஒவ்வொரு பொருளையும் இறக்குமதி செய்து தான் சாப்பிடவேண்டும். இன்றைய காலகட்டத்தில் விளை நிலங்கள் எல்லாம் வீடு கட்டுவதற்கு பிரித்து போட்டு விற்பனை செய்கின்றனர் இது தான் இன்று கொடுகட்டி பறக்கும் வியாபாரம். விவசாய விளை நிலங்களில் வீடுகட்ட அப்ரூவர் தரக்கூடாது என அரசு சொன்னாலும் நம் ஆட்கள் அப்ரூவர் தரும் அதிகாரியை அப்ரூவராக மாற்றி அனுமதி வாங்கிவிடுகின்றனர். விவசாய நிலங்களை எல்லாம் அளித்து தொழிற்சாலைகளும், வீட்டு மனைக்கும் விற்பனை செய்வது இன்னும் தொடருமானால் விரைவில் இந்த சுதந்திர திருநாட்டில் சோத்துக்கு வழி இல்லாம் இறக்குமதி என்னும் பெயரில் அடுத்தவன் கை ஏந்தும் நிலைமை வரும்...

23 comments:

 1. உங்கள் இடுகை அனைத்திலும் நல்ல கருத்துக்களை கூறுகிறீர்கள்.

  ReplyDelete
 2. விவசாய விளை நிலங்களில் வீடுகட்ட அப்ரூவர் தரக்கூடாது என அரசு சொன்னாலும் நம் ஆட்கள் அப்ரூவர் தரும் அதிகாரியை அப்ரூவராக மாற்றி அனுமதி வாங்கிவிடுகின்றனர்.


  ...... வேதனையாக இருக்கிறது.....

  ReplyDelete
 3. முக்கியமான தகவல்கள்

  ReplyDelete
 4. நல்ல பகிர்வு சதீஷ்...

  காசு தான் எல்லாம் செய்கிறது.. இது மாறாவிட்டால் ரொம்ப கஷ்டம்...

  ReplyDelete
 5. விவசாயம் அழிந்தால் நாடே அழிந்து விடும் என்பது தான் உண்மையே!

  ReplyDelete
 6. சுதந்திரம் சுத்த தந்திரம்....

  ReplyDelete
 7. சிந்தனையை தூண்டும் நல்ல பதிவு.

  ReplyDelete
 8. ///அனைவரையும் திட்டியும், பாராட்டியும் எழுதுகிறோம் இது நமது சுதந்திரம், திட்டு வாங்கியர்கள் நமக்கு ஆட்டோவில் ஆள் அனுப்பலாம் அது அவர்கள் சுதந்திரம்.///

  நகைசுவையோடு கருத்துக்களை சொல்லிய விதம் அருமை! ம்..!! எல்லோருக்கும் இந்த சிந்தனை போய் சேரணுமே!

  இன்னும் ஒரு 20 வருடங்கள்ல நம்ப நாடு எந்த நிலைக்கு போகுமுங்கிறது, அந்த கடவுளுக்கு தான் வெளிச்சம்!!!

  ReplyDelete
 9. இன்றைய சுதந்திரம் மகாத்மாவின் புன்னகையில் தான் இருக்கிறது.. ( காசு தாங்க )

  ReplyDelete
 10. சுதந்திர திருநாட்டில் சோத்துக்கு வழி இல்லாம் இறக்குமதி என்னும் பெயரில் அடுத்தவன் கை ஏந்தும் நிலைமை வரும்...

  //

  ஏறக்குறைய நெருங்கி விட்டோம் இந்நிலையை...

  ReplyDelete
 11. //விவசாயம் அழிந்தால் நாடே அழிந்து விடும் என்பது தான் உண்மையே!//

  என் கருத்தும் இதுவே!

  ReplyDelete
 12. பச்சை பசேல் பயிர்களிருந்த வயல்கள்
  இன்றோ பாலைவன ப்ளாட்டுகளாய்
  என்ன செய்ய ?

  அத்தனையும் நிதர்சனம்

  எங்க தாத்தா விருப்பத்துடன் அனுபவித்து வயலில் இறங்கி வேலை செய்தார்

  எங்க அப்பா சாப்பாட்டுக்காவது வேண்டுமே என்று விவசாயத்தை தொடர்கிறார்

  நானோ வரப்பில் போய் நின்று வேடிக்கை பார்ப்பதை கூட கீழ்தரமாக நினைக்கிறேன்

  எங்கப்பா முடிந்தவரை விவசாயம் செய்வார்,அதன் பிறகு நான் இந்த அவசர பூமியில் அதை விற்றுவிடுவேன் அல்லது வீடாக்கிவிடுவேனே

  வயலில் இறங்க ஆட்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை மெஷின்கள் இருக்கிறது,ஆனால் வயலே இல்லாமல் போனால் என்ன செய்வது ??

  ReplyDelete
 13. மிக நல்ல பதிவு தோழர் சதீஸ் ..

  உணவுப் பொருள் பாதுகாப்பு சட்டம் என்ற பெயரில் ஏழை மக்களின் வயிற்றிலடிக்க இந்த அரசாங்கம் ஒரு சட்டம் கொண்டு வரப் போகிறது. மாதம் 570 க்கு குறைவான சம்பளம் வாங்கும் மக்களுக்கு மட்டுமே இனி ரேசன் பொருள்கள் சலுகை விலையில் அதுவும் வெறும் 35 கிலோ மட்டுமே வழங்கப் படும். இந்த உணவுப் பொருள் பாதுகாப்பு சட்டத்தால் யாருக்கு பாதுகாப்பு ?.. .. இப்படி ஒரு புறம் இருக்க மறுபுறத்தில் எஃப்.சி.ஐ குடவுனில் எலிகள் உணவு தானியங்களை அழிக்கின்றன, மீதி உணவுப் பொருள்கள் அழுகி நாசமாகின்றன. ஆக உணவுப் பாதுகாப்பு என்பது இங்கு எலிகளுக்கே .. உலக வங்கியின் வழிக் காட்டலில் இந்திய மக்களை அழிக்க ஆரம்பித்திருக்கிறது இந்திய அரசு ./

  ReplyDelete
 14. இந்த லட்சனத்தில இந்திய வல்லரசுன்னு ஒரு குரூப்பு கூவிட்டு திரியுதுங்கோ ...

  ReplyDelete
 15. உங்கள் படைப்பைப்பார்த்த பிறகு என் எழுத்துக்கள் என்னை கேலி செய்கின்றன.கமர்சியலாக எழுதாமல்.,சமூகப்பொறுப்போடும்,இயற்கை,மனித வள மேம்பாட்டுக்காகவும் எழுதும் உங்கள் எழுத்துக்கு தலை வணங்குகிறேன்

  ReplyDelete
 16. சிந்தனைக்குரிய விஷயம் தான்!!

  ReplyDelete
 17. சுதந்திர திருநாட்டில் சோத்துக்கு வழி இல்லாம் இறக்குமதி என்னும் பெயரில் அடுத்தவன் கை ஏந்தும் நிலைமை வரும்...


  ஏறக்குறைய நெருங்கி விட்டோம் இந்நிலையை...

  அதே தான்!

  ReplyDelete
 18. சங்கவி உங்களுக்கான பின்னூட்டம் இங்கே - http://pmtsampath.blogspot.com/2010/08/blog-post_27.html

  ReplyDelete
 19. விளை நிலங்களையும்,வாழ்விடங்களையும், பன்னாட்டு முதலாளிகளிடம் இழந்து வருகிறோம்,[இனியொரு சுதந்திரம் வேண்டும்.]

  ReplyDelete
 20. நல்ல கருத்துக்கள் - என்ற மட்டில் நிறுத்திக் கொள்கிறேன் நண்பரே! :-)

  ReplyDelete
 21. சுதந்திரம் எப்படி எல்லாம் தடுமாறுகிறது....வேதனையான விசயத்தை பகிர்ந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் தோழர்!

  ReplyDelete
 22. சுதந்திரம் எப்படி எல்லாம் தடுமாறுகிறது....வேதனையான விசயத்தை பகிர்ந்திருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் தோழர்!

  ReplyDelete
 23. Nalla oru system Indiavil illai. Oru system develop pannuvathatkaana muyarchikal Indiaivil edukka paduvathu illai een endral nammai aalkiravarkal niraya per Rowdykal matrum Rowdy lawyerkal. Avarkalukku enna puriya pokirathu

  ReplyDelete