Pages

Friday, March 19, 2010

பேருந்தில் காதல்..

கல்லூரியில் படிக்கும் போது நிறைய நண்பர்களுக்கு காதலிகள் உண்டு அவர்கள் சந்திக்கும் இடமோ பேருந்துதான். இன்று காதலிக்கும் காதலர்களுக்கு உள்ள தைரியம் அன்று இல்லை சுமார் 15 வருடம் பின்னோக்கி பார்த்தால் அப்போது கல்லூரியில் காதல் என்பது குறைவுதான் எனக்குத் தெரிய பெண்ணிடம் பேசாமல் காதல் செய்து பயத்தால் சொல்லாமல் இருந்தவர்கள் தான் அதிகம்.

தினமும் அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில்தான் வருவேன் இன்று ஊருக்கு செல்ல வேண்டி இருந்ததால் வண்டியை ஸ்டேன்டில் போட்டு விட்டு சொகுசு பேருந்தில் பயணம் செய்தேன். அதுவும் கோவை மாநகரத்தில் இப்ப நிறைய விட்டுட்டாங்க உண்மையிலேயே சொகுசாதான் இருந்தது. ஒரு பெண் டிக்கெட் வாங்குங்க என ஒருவனிடம் பணம் கொடுத்தால் அதை வாங்க நம்ம பசங்க அடிச்சிக்கறாங்க.. டேய் நான் வாங்கற நீ வாங்கற என்று. நாடு எவ்வளவுதான் வளர்ச்சிப்பாதையில் சென்றாலும் இன்டெர்நெட், மொபைல், பேஸ்புக், ஆர்குட் என எது வந்தாலும் இந்த பேருந்து காதல் சுகம் கொஞ்சம் சுகந்தான்.
பார்க்காத காதல், பழகிய காதல், நட்பு காதல் என பல வகை காதல் இருந்த போதிலும் இந்த பேருந்து காதல் நம் பதிவர்களில் பல பேருக்கு அனுபவம் இருக்கும் என நினைக்கிறேன்.
நான் முதன் முதலில் 6ம் வகுப்பு அரசு மேல்நிலை பள்ளிக்கு செல்லும் போது பஸ்ஸில் தான் செல்வேன் அப்போது எல்லாம் பின் படிக்கட்டில் தான் ஏறுவேன். அதனால சைட் அடிக்கவும் முடியல, லவ் பண்ணவும் முடியல. என் குறும்பு கொஞ்சம் அதிகமானதால் என்னை கோபியில் விடுதியில் சேர்த்துவிட்டனர். அப்புறம் கல்லூரி செல்லும் போது தான் பேருந்தில் தினமும் முன் படிக்கட்டில் தொங்கிக்கொண்டே செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி தொங்கினாலும் யாரும் என்னை லவ் பண்ணல என்ன பன்றது நா கொடுத்து வைத்தது அவ்வளவுதான். தினமும் பேருந்தில் செல்லும் போது என் நண்பன் ஒரு பொண்ண காதலிச்சான் (ஒன் சைடு தான்) நம்ம ஆளு அந்தப் பொண்ணு இவனப்பார்க்க மாமாவ (கண்டக்டர், டிரைவருக்கு பசங்க அன்பா இப்படித்தான் கூப்பிடுவாங்க) ஐஸ் வைச்சுக்குவான் அப்பதான் முன்னாடி படியில் ஏறமுடியும், டிக்கெட் கொடுக்கற சாக்கில் பேசமுடியும், தினமும் பேருந்தில் பாடும் அனைத்து பாட்டுக்கலும் காதல் பாட்டுக்கல் தான் இதுல ஒருத்தன் அவ ஆள் கூட சண்டைனா உடனே அடுத்த நாள் சோகப்பாடலாப் பாடும்.
இவனுக காதலிக்கரத விட செய்யற சேட்டைய நான் தினமும் ரசிப்பேன் (வேற என்ன செய்ய முடியும்), இந்த பேருந்து காதலைப் பொறுத்தமட்டில் ஒரு பெண்ணைப் பார்த்து தினமும் ஒரே பேருந்தில் இருவரும் வந்து காதல் பாடல்களாக பாடவிட்டு அந்தப் பொண்ணிடம் பேசும் போது ஒரு வருடம் முடிந்து விடும். அடுத்த வருடம் இதே கதை தான் அப்புறம் கொஞ்சநாள் கழித்த அந்த பெண் பேருந்தில் ரெகுலராக வருபவர்களிடம் அண்ணா இந்தாங்க என் கல்யாணப் பத்திரிக்கை நீங்க கண்டிப்ப வரணும் என கொடுப்பாள் நம்ம ஆள் சோகம் ஆகிவிடுவான். அடுத்த நாள் புதுசா ஒரு பொண்ணு வர ஆரம்பிச்சிட்டா மீண்டும் அதே கதைதான் அந்த கால கட்டத்தில் காதலை பேருந்தில் சொன்னவர்கள் அதிகமில்லை ஆனால் கல்லூரி போகும் போது காதலிப்பவர்கள் பேருந்து காதலராகத்தான் இருப்பார்கள்.(எங்க ஊர்ல இருபாலரும் படிக்கும் கல்லூரி அதிகம் இல்லை அப்ப பெண்கள் கல்லூயில் தான் கூட்டம் இருக்கும்).
தினமும் வரும் பெண்களிடம் பேசுவதற்காகவே நம்ம ஆளுக ஆரம்பித்தது தான் பேருந்து தினம் அன்றைக்கு யார் வேண்டுமானலும் யார்கிட்ட வேண்டுமானலும் பேசிக்கொள்ளலாம் நம்ம ஆளுங்க சைக்கிள் கேப்ல அன்னைக்கு லவ்வ சொல்லிடுவானுக அப்புறம் கொண்டாட்டம் தான்...
பேருந்தில் செல்லும் எல்லா நாளுமே ஒரு சுகமான நாட்கள் தான் ஆனால் படிக்கும் போது ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவம் இருந்திருக்கும் அதனால் இதை தொடர் பதிவாக நினைக்கிறேன்.
இத்தொடர் பதிவிற்கு யாரை அழைக்கலாம் என யோசித்து நம் நட்புக்கள்  ஒவ்வொருத்தருக்கும் நிச்சயமாக பேருந்தில் காதல் அனுபவம் இருக்கும் அனைவரையும் தொடருக்கு அழைக்க ஆசைதான். நான் ஒரு 10 பேரை இப்போது அழைக்கிறேன்.
பிரபாகர்
பலாபட்டறை ஷங்கர்
சித்ரா
திவ்யாஹரி
டி.வி.இராதாகிருஷ்ணன்
வீடு திரும்பல் மோகன்
வித்யா
பனித்துளி சங்கர்
கண்ணகி
தீபா
நீங்கள் ஒவ்வொருவரும் நண்பர்களை அழைக்க வேண்டுகிறேன்...

64 comments:

 1. ஒப்பாரிதான், சங்கவி. me, paavam!
  மகளிர் கல்லூரி - மகளிர் மட்டும் பஸ். :-(

  ReplyDelete
 2. வித்தியாசமான தொடர்பதிவுக்கு மாஅழைப்பு! ஜமாய்ச்சிடுவோம்...

  பிரபாகர்.

  ReplyDelete
 3. ஆஹா !
  என்ன இதுல நம்ம பெயரும் இருக்குற மாதிரி தெரியுதே .

  வெய்ட் பண்ணுங்க இந்த மலையை உருட்டிட்டு . இன்னும் சற்று நேரத்தில் மீண்டும் உருண்டு வருகிறேன் .

  ReplyDelete
 4. வாங்க சித்ரா வாங்க...

  மகளிர் மட்டும் பஸ்ல மட்டும் சும்மாவா இருந்திருப்பீங்க...

  எத்தனை பேரை காலச்சிருப்பீங்க... அதை சொல்லுங்க...

  ReplyDelete
 5. வாங்க பிரபாகர் நண்பா....

  நிச்சயம் எழுதுங்க நண்பா... உங்க மகன் போட்டோ எல்லாம் கலக்கலா இருக்குது...

  ReplyDelete
 6. வாங்க பனித்துளி சங்கர்...

  சீக்கிரம் வாங்க....

  ReplyDelete
 7. Sangkavi said...

  //சுமார் 15 வருடம் பின்னோக்கி பார்த்தால் அப்போது கல்லூரியில் காதல் என்பது குறைவுதான் எனக்குத் தெரிய பெண்ணிடம் பேசாமல் காதல் செய்து பயத்தால் சொல்லாமல் இருந்தவர்கள் தான் அதிகம்.//


  டி.ராஜேந்தர் படம் பார்க்கிற மாதிரியல்ல இருக்கு....

  ReplyDelete
 8. //மாமாவ (கண்டக்டர், டிரைவருக்கு பசங்க அன்பா இப்படித்தான் கூப்பிடுவாங்க) ஐஸ் வைச்சுக்குவான் அப்பதான் முன்னாடி படியில் ஏறமுடியும்//

  Ithu yennavo unmaithan, ithunga pandra rousu thaanga mudiyathuppa...

  :-)

  ReplyDelete
 9. பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரமா............ரைட்டு.........கலக்குங்க.

  ReplyDelete
 10. அழைப்புக்கு நன்றி... எங்களுக்கெல்லாம் அந்த சான்சே இல்ல.இருந்தாலும் அறிந்த சில்வற்றை சொல்கிறேன்..வருகிறேன்.விரைவில்..

  ReplyDelete
 11. வாங்க கனிமொழி...

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

  ReplyDelete
 12. வாங்க பிரேமாமகள்...

  15 வருடங்களுக்கு முன்பு அவருக்கு என ஒரு மாஸ் இருந்துச்சுங்க...

  ReplyDelete
 13. வாங்க சைவகொத்துப்பரோட்டா...

  வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

  ReplyDelete
 14. வாங்க கண்ணகி...

  சொல்லுங்க.. எதிர்பார்க்கிறேன் உங்கள் பதிவை...

  ReplyDelete
 15. நண்பா பேருந்தில் எனக்கு காதல் அனுபவம் இல்லை. எனவே இதனை தொடரலை. தவறாக எண்ணாதீர்கள். இன்னொரு முறை நிச்சயம் நீங்கள் அழைக்கும் போது எழுதுகிறேன்

  ReplyDelete
 16. உங்களின் இந்தப் பதிவு பிடித்திருக்கிறது. நல்லா எழுது இருக்கீங்க.

  ReplyDelete
 17. //நான் முதன் முதலில் 6ம் வகுப்பு அரசு மேல்நிலை பள்ளிக்கு செல்லும் போது பஸ்ஸில் தான் செல்வேன் அப்போது எல்லாம் பின் படிக்கட்டில் தான் ஏறுவேன். அதனால சைட் அடிக்கவும் முடியல, லவ் பண்ணவும் முடியல. //

  சங்கவி,

  மாட்னடி மாப்ள நீ.

  நலா கேட்டுக்குங்க மஹா ஜனங்களே!

  இவரு, 6-ஆவது படிக்கும்போதே... லவ் பண்ணவும் முடியலயாம், சைட் அடிக்கவும் முடியலயாம்.

  என்னா சேட்டை...!

  இப்படி ப(சொ)ன்னா ஹாஸ்ட்டல்ல சேக்காம..?

  உன்னைய, மடத்துல சேக்காம விட்டாகளே. அதுக்கே சந்தோஷப்படனும் மாப்ள.

  ReplyDelete
 18. வாங்க நர்சிம் சார்...

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்...

  ReplyDelete
 19. வாங்க சத்ரியன்...

  ரொம்ப நாளா காணம்... நல்லாயிருக்கீங்களா?
  சார் நான் படித்தது ஆண்கள் மேல்நிலைப்பள்ளி...அப்புறம் விடுதியும் தான்...
  இதுக்கு மடமே பரவாயில்லையே....

  ReplyDelete
 20. //உன்னைய, மடத்துல சேக்காம விட்டாகளே. அதுக்கே சந்தோஷப்படனும் மாப்ள//
  ஓஹோ இப்படித்தான் ’மட’ங்கள் வளருதா?? :))

  --
  சங்கவி,. ரைட்டு கண்டிப்பா எழுதறேன். அழைப்புக்கு நன்றி..:)))))  (ஆண்டவா என் பதிவை காப்பாற்று, தொடர் பதிவை நான் பார்த்துக்கொள்கிறேன்..) ::))

  ReplyDelete
 21. ஹூம்! எல்லார் டைரியிலும் தவறாமல் ஒரு மயிலிறகு இருந்து தான் தீரும் போலிருக்கிறது! நல்லாயிருக்குங்க!!

  ReplyDelete
 22. //ரொம்ப நாளா காணம்... நல்லாயிருக்கீங்களா?//

  பூரண சுகமாயிருக்கேன் நண்பா.

  ”வேலை”க்கு முதலிடம்.
  ”வலை”க்கு இரண்டாமிடம்...(!?)

  (அட..! நம்புங்கப்பா.)

  ReplyDelete
 23. சார் , ஜம்மாயிசுட்டிங்க.....
  .
  எங்க காலேஜ்ல லேடிஸ், ஜென்ட்ஸ் தனி தனி பஸ்சு சார் :-(((( ..

  காலேஜ் லேடிஸ் பஸ்ஸ சைக்கிள்ல சேஸ் பன்னி இருக்கிங்களா ?

  ReplyDelete
 24. //(ஆண்டவா என் பதிவை காப்பாற்று, தொடர் பதிவை நான் பார்த்துக்கொள்கிறேன்..) ::))//

  சேட்ட்ட்ட்ட்டை..... எழுதி வெய்யுங்க. அங்கேயும் வ்ர்ர்ர்ரேன்.

  ReplyDelete
 25. /////// சேட்டைக்காரன் said...
  ஹூம்! எல்லார் டைரியிலும் தவறாமல் ஒரு மயிலிறகு இருந்து தான் தீரும் போலிருக்கிறது! நல்லாயிருக்குங்க!! ////////////  என்ன சொல்றீங்க என் டைரியில கோழியிலறகுதான் இருக்கு !!!

  என் டைரியில மயிலிறகு கானம் இருங்க நல்ல தேடிப்பாக்குறேன் .

  ReplyDelete
 26. வாங்க ஷங்கர்...

  நிச்சயம் நீங்களும் எழுதுங்க இன்னும் 10 பேரை கூப்பிடுங்க...

  ReplyDelete
 27. வாங்க சேட்டைக்காரன்...

  உங்க பேருந்து சேட்டையையும் கொஞ்சம் எழுதுங்க...
  பின்னூட்டத்துல எங்க சேட்டைய சொல்கிறோம்...

  ReplyDelete
 28. வாங்க மங்குனி அமைச்சர்...

  உங்க கதை சினிமா போல் இருக்கும் போல இருக்குதே...
  உங்க சேஸ்யை எழுதுங்க..

  ReplyDelete
 29. பேரூந்தில் எத்தனையோ சுவாரசியமான சம்பவங்கள் ஒவ்வொருத்தருக்கும் இருக்கும், அதை வெளிக்கொணரும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது.

  தொடருங்கள் தொடருங்கள்.. வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டே...

  ReplyDelete
 30. சத்ரியன்...

  //”வேலை”க்கு முதலிடம்.
  ”வலை”க்கு இரண்டாமிடம்...(!?)//

  அப்ப வீட்டுக்கு...

  நானும் 1 மாதம் நிறைய வேலைப்பளு இப்ப கொஞசம் குறைஞ்சது வலைக்கு வந்துவிட்டேன்...

  ReplyDelete
 31. //அப்ப வீட்டுக்கு...//

  சங்கவி,

  இருப்பதே வீட்டுலதானே.

  ReplyDelete
 32. அழைத்தமைக்கு நன்றி. கண்டிப்பாக எழுதுகிறேன்.

  ReplyDelete
 33. //
  (ஆண்டவா என் பதிவை காப்பாற்று, தொடர் பதிவை நான் பார்த்துக்கொள்கிறேன்..) ::))//

  ஆண்டவா, ஷங்கரை தொடர அழைப்பவர்களை காப்பாற்று.. ஷங்கரை நான் பார்த்துக்கொள்கிறேன்..

  ReplyDelete
 34. நல்லாருக்கு கொசுவத்தி.
  /சத்ரியன் said...
  உன்னைய, மடத்துல சேக்காம விட்டாகளே. அதுக்கே சந்தோஷப்படனும் மாப்ள./

  ஓஓ. அப்ப 6வது படிக்கிறப்ப காதல் வந்தாதான் மடத்துக்கு தகுதியோ?:))

  ReplyDelete
 35. நல்லா எழுதியிருக்கீங்க பாஸ்...

  ////மாமாவ (கண்டக்டர், டிரைவருக்கு பசங்க அன்பா இப்படித்தான் கூப்பிடுவாங்க) ஐஸ் வைச்சுக்குவான் அப்பதான் முன்னாடி படியில் ஏறமுடியும்//

  Ithu yennavo unmaithan, ithunga pandra rousu thaanga mudiyathuppa...

  :-)//

  வவ்வ்வவ்வே...
  இவக மட்டும் என்னவாம்?

  ReplyDelete
 36. போச்சுடா! :-)

  இனி,காதல் கொழுந்து விட்டு எறியும்!

  நடத்துங்க.. :-))

  ReplyDelete
 37. வாங்க வித்யா...

  நிச்சயம் உங்க பதிவை எதிர்பார்க்கிறேன்...

  ReplyDelete
 38. வாங்க எறும்பு சார்...

  ஷங்கர விட மாட்டோம் சார்..

  ReplyDelete
 39. வாங்க வானம்பாடி சார்...

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சார்...

  ReplyDelete
 40. வாங்க வசந்த்...

  சரியாச்சொன்னீங்க....

  ReplyDelete
 41. வாங்க பா.ராஜராம் சார்...

  தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சார்...

  இனி காதலை ஒரு கை பார்த்துவிடலாம்னு இருக்கோம் சார் நீங்களும் உங்க அனுபவத்தை சொல்லுங்க சார்....

  ReplyDelete
 42. சங்கக் கவி சங்கவி

  இந்த இடுகைக்குள் இழையோடும் கவித்துவம் ரசனை!

  தொடர்க வாழ்த்துகள்

  ReplyDelete
 43. சங்கவி நானும் பாவம் :((ஹாஸ்டல்தான் தங்கிப் படிச்சேன் எனவே நோ பஸ் நோ கொண்டாட்டம்

  ReplyDelete
 44. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 45. அந்த பெண் பேருந்தில் ரெகுலராக வருபவர்களிடம் அண்ணா இந்தாங்க என் கல்யாணப் பத்திரிக்கை நீங்க கண்டிப்ப வரணும் என கொடுப்பாள்..//

  சோகமா..?
  "இதுக்கு இவ்வளவு நாளாம்மா?" என்று கேட்க வேண்டியது, தங்கச்சி சிரிச்சாளே என்று பாட வேண்டியது, கல்யாணத்துல போய் மாஞ்சி மாஞ்சி வேலை செய்ய வேண்டியது...அங்கே அடுத்த ஆள் கிடைக்கும் பாருங்க...

  ReplyDelete
 46. பஸ்சில் போயி படித்த பாக்கியமே இல்லாம போச்சு.

  ReplyDelete
 47. 6ஆம் வகுப்பிலேயா? ம்ம்ம் நடக்கட்டும் :)))

  ReplyDelete
 48. ஏனுங்க, இது என்ன கொடுமையா இருக்கே! "நான் லவ்வு கிவ்வெல்லாம் பண்ணலங்க, நல்ல புள்ள" அப்படின்னு சொல்லிப்புட்டு 10 பேரைக் கூப்பிட்டு நீங்க செஞ்சதையெல்லாம் சொல்லுங்கன்னு கூப்புடுறீங்களே, நியாயமுங்களா? அடுத்தவாட்டியாச்சும், நீங்க செஞ்ச லூட்டியப் பத்தி எழுதிப்போட்டுட்டு அடுத்தாளைக் கூப்புடுங்க, சரிங்களா? அடுத்தாளைக் கவுக்கப் பாக்குறீங்களே, நீங்க ரொம்ப நல்லவருங்க :))

  ReplyDelete
 49. நல்ல இருக்கு பாஸ் :)

  ReplyDelete
 50. வாங்க thenammailakshmanan

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

  ReplyDelete
 51. வாங்க நேசமித்ரன்...

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

  ReplyDelete
 52. வாங்க ஸ்ரீராம்...

  உங்க ஐடியா எல்லாம் சூப்பர்...

  ReplyDelete
 53. வாங்க தாராபுரத்தான்...

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

  ReplyDelete
 54. This comment has been removed by the author.

  ReplyDelete
 55. வாங்க மயில்...

  வாங்க தாரணிபிரியா....

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

  ReplyDelete
 56. வாங்க அக்கினிச்சித்தன்...

  இப்படி கவுத்திட்டிங்களே...

  ReplyDelete
 57. வாங்க ரோமியோ...

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி....

  ReplyDelete
 58. ஒ நீங்களும் நம்ம ஊரு தானா. 6 ம் வகுப்புலயே ஆரம்பிச்சா அப்புறம் ஆப்பு தான். கோபி போக வேண்டியது தான். பஸ் டே எல்லாம் பழைய நினைவுகள் தான், ஜாலி நாட்கள் அது எல்லாம்

  ReplyDelete
 59. பஸ்ல காதலா... ம், கலக்கல் மேட்டர் நம்ம மக்கள் எழுத.

  ReplyDelete
 60. Hi,

  Nice Post.

  I wrote a similar piece here.
  Check out ...

  http://gokul-r.blogspot.com/2010/02/blog-post.html

  ReplyDelete
 61. அன்பின் சங்கவி

  இப்படி ஒரு தொடராட்டமா - சின்ன வயசுக் காதல் - பேருந்துக் காதல் - இப்ப அதப்பத்தி எழுதி குடும்பத்துலே குழப்பம் வரதுக்ககா - ம்ம்ம்ம் - பாவம் நெம்பப்பேரு மாட்டப்போறாங்க

  ReplyDelete