Pages

Friday, February 5, 2010

பாட்டியின் பழமொழியும் சங்கவியும்...

கடந்த வார இறுதியில் எனது வீடு கோவை மத்தியில் இருந்ததை மாற்றலம் என முடிவு செய்து கோவை பேரூர் தாண்டி ஒரு அழகான மலை அடிவாரத்தில் வீடு இடம் பெயர்ந்துள்ளேன். கடந்த ஞாயிறு அன்று வீடு பால்காய்ச்சும் நிகழ்ச்சி நடந்தது அன்று வீட்டில் இருந்த பெரியவர்கள் எல்லாம் வந்து இருந்தனர். இதில் மிக வயதான எங்க பாட்டியும் வந்து இருந்து. அந்த பாட்டி ஒவ்வொரு முறை பேசும் போதும் பழமொழிகளை சொல்லி பேசியது எனக்கு இந்த பழமொழிகள் எல்லாம் கேட்டு இருந்தாலும் அன்று நான் கவனிக்கத் தொடங்கினேன். இன்று அந்த பழமொழிகள் எல்லாம் நம்மில் பலபேருக்கு நிச்சயம் தெரியும் ஆனால் உபயோகப்படுத்த மாட்டோம்.
பாட்டியிடம் நான் மாட்டினேன் பாட்டி என்னைப்பார்த்து கேட்டது ஏண்டா பேராண்டி உனக்கு மாதம் எவ்வளவு சம்பாரிக்கறாய் என நான் சிரித்துக்கொண்டே சொன்னேன் வீட்டுக்கு எவ்வளவு தருகிறாய் மிண்டும் சிரித்து விட்டு தருவதில்லை என்றேன் என்ன செய்யற உன் சம்பாதியத்தை என கேட்க நான் சிரிக்க அதற்கு சொன்னது பாட்டி சும்மாவ சொன்னாங்க சிறுவார் வீட்டு வெள்ளாமை வீடு வந்து சேராதாம் என்று எனக்கு புரியவில்லை பின்பு யோசிக்கும் போது தான் புரிந்தது அந்த பழமொழி.
அன்று முழுவதும் நான் கேட்ட அதற்கு முன்பு கேட்ட மற்றும் நண்பர்களிடம் கேட்ட பழமொழிகளை தொகுக்க முயற்சித்தேன் ஒரளவு தொகுத்து உள்ளேன். நீங்களும் இப்பழமொழிகளை அனுபவியுங்கள்... "பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது".

மழைக்கும் சூலுக்கும் காலம் ஏது?
மழை எப்போது பெய்யும், கருவுற்ற பெண் எப்போது பிரசவிப்பாள் என்று தெரியாது அதற்காக இப்பழமொழி.

அடைத்த கதவு திறக்காத மழை
கோடை காலத்தில் இடியுடன் கூடிய மழை பெய்யும்
ஐப்பசி மாதத்தில் அடைமழை பெய்யும்
கார்த்திகை மாதம் கனமழை பெய்யும்
ஒரு நாள் முழுவம் தொடந்தது பெய்யும் மழையை அடைமழை அல்லது அடைத்த கதவு திறக்காத மழை என்கிறனர்.

அந்தி மழை அழுதாலும் விடாது! 
கோடை காலத்தில் அந்தி நேரத்தில் மழை பிடித்தால் நாள் முழுவதும் மழை பெய்யும் அதற்கு கூறிய மொழி தான் அந்தி மழை அழுதாலம் விடாது.

தவளைகள் போடும் சத்தத்தை தவளை, உடைக்கட்டா... தவக்கட்டா... என்று மழை கூறுவதாகக் கற்பனை செய்து கூறுகின்றார்கள். அதாவது வயல் வரப்புகள் எல்லாம் உடைத்துவிடும் அளவோடு மழை பெய்யப் போகிறது என்று தவளை ஆளுடம் சொல்வதாகக் கூறுகிறார்கள்.
மழை முகம் பாராத பயிரும்; தாய் முகம் பாராத பிள்ளையும் ஒன்று என்று கூறுகிறது ஒரு பழமொழி.

கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைச்சானம்
அடுத்தவன் பொருளை எடுத்து மற்றவருக்கு தருவது தானம் ஆகாது. இந்த கருத்தை தான் இப்பழமொழி உனர்த்துகிறது.

அரச மரத்தை சுற்றி வருவதற்குள் அடிவயிற்றைத் தொட்டுப்பார்த்தாளாம்
குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் தினமும் அரச மரத்தைச்சுற்றி வந்தால் குழந்தைபேறு உண்டாகும் என்பது ஒரு நம்பிக்கை இந்த பழமொழி கூறுவது அவசரம் பற்றியே மரத்தை சுற்றிக் கொண்டே வரும்போது அடிவயிறு பெருத்துவிடுமா என்ன? கரு உருவாக வேண்டும் மாதங்கள் சில போக வேண்டும் அல்லவா.

இருட்டு வீட்டுக்குப் போனாளும் திருட்டு கை நிக்காது
மனிதன் தன் செயலைமாற்றிக் கொள்வது கடினம்.இயல்பாய் அமைந்து விட்ட சுபாவம் எளிதில் மாறாது மறையாது.

கிழிஞ்ச சேலையும் புழுங்கரிசி திண்ண வாயும் சும்மா இருக்காது
சேலை பழசாகி விட்டால் கிழிந்து கொன்டே இருக்கும் நின்றால்,உட்கார்ந்தால் கூட கிழியும். சிலர் புழுங்கல் அரிசியை சதா வாயில் அடக்கி மெல்லுவார்கள்.இந்த பழக்கத்தால் அவர்கள் வாய் சதா அசை போட்டுகொண்டே இருக்கும்.

சும்மா இருந்த வாய்க்கு கொஞ்சம் அவல் கிடைத்த மாதிரி
சாதாரணமாகவே (வாய் சதா அசை) பிறர் பற்றி பொல்லாங்கு பேசும் ஒருவனுக்கு அவனை பற்றி செய்தி கிடைத்துவிட்டால் கேட்கவா வேண்டும்?

பந்திக்கு முந்து படைக்கு பிந்து
சாப்பிடுவதற்று நம் கை (வலது கை) முந்தும். படைக்குச் செல்லும் சமயத்தில் (போர் புரியும் நேரம்) இடக்கையில் வில்லை ஏந்தி வலக்கையால் பின்நோக்கி இழுத்து அம்பை எய்வார்கள். எவ்வளவு தூரம் கை பின்னோக்கி வலக்கை செல்கிறதோ அவ்வளவிற்கு அம்பு வேகமாக செல்லும் இதுவே பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் என்கிறார்கள்.

ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்
பழங்கால சித்த மற்றும் நாட்டு மருத்துவத்தில் மூலிகை, சில பூக்கள், காய், விதை போன்றவற்றை போல சில மூலிகை (மருத்துவ குணம் கொண்ட) வேர்களும் முக்கிய பங்கு வகித்தன. அதன் பொருட்டே ஒரு வைத்தியன் அவனிடம் ஆயிரம் மருத்துவ வேர்களை வைத்திருந்தாலும், தெரிந்து வைத்திருந்தாலும் அவன் அரை வைத்தியகாரன் தான் என்று சொன்னார்கள்.

யாணைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்
வலிமை யானவனுக்கு ஒரு நேரம் வந்தால் எளிமையானவனுக்கும் ஒரு நேரம் வரும் என்பதே இதன் பொருள்.

கைப் புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு
கைபுண் அல்ல"கைப்பூண்"அணியக்கூடிய ஆபரணம்,அதாவது கழுத்தில் அணியும் ஆபரணத்தைப் பார்க்க கண்ணாடி அவசியம்.ஆனால் கையில் அணியும் பரணத்தைப் பார்க்க கண்ணாடி தேவையில்லை நம் பக்கத்திலிருக்கும் மனிதனைத் தெரிந்துகொள்ள அல்லது புரிந்துகொள்ள மூன்றாவது மனிதன்க் கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதே இதன் உட்கருத்து.

கப்பலே கவிந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே
கப்பல் கவிழ்ந்து நீ ஏழையாகி விட்டாலும் அதற்க்காக மனம் நொந்து கன்னத்தில் கை வைத்து உட்கார்ந்துவிட்டால் போன பணமும், செல்வமும் திரும்பவா வந்துவிடும்.இது ஒரு கருத்து.மற்றொறு கருத்து. கன்னம் என்பதுமுகத்தில் உள்ள கன்னம் அல்ல."கன்னக்கோல்" கப்பல் கடலில் முழ்கி பல லட்சங்கள் நஷ்டம் ஏற்பட்டாலும் நீ மீண்டும் உழைத்து சம்பாதிக்க வேண்டுமே தவிர, கன்னக்கோல் வைத்து திருடி பிழைக்கக் கூடாது. "கன்னக்கோல்"-அந்தக் காலத்தில் திருடர்கள் கன்னக்கோலைப் பயன்படுத்தி சுவற்றில் ஒட்டை போட்டு திருடுவார்கள்.

ஆட தெரியாதவனுக்கு தெரு கோணலாம்
நமது இயலாமைக்கு அல்லது தோல்விக்கு எதாவது ஒரு காரணம் கூறி தப்பிப்பதையே இப்பழமொழி விளக்குகிறது.

ஆறு வயதில் அண்ணன் தம்பி, பத்து வயதில் பங்காளி

தாயும் பிள்ளை என்றாலும் வாயும் வயிறும் வேறு தான்


தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை


அடியாது மாடு படியாது


எண்ணெய் தடவிக்கிட்டு குப்புறப்படுத்தாலும் ஒட்டுற மண் தான் ஒட்டும்

இன்னும் நிறை இருக்கின்றது இதற்கான விளக்கங்களை தொகுத்து இரண்டாம் பகுதியாக வெளியிடலாம் என இருக்கிறேன். உங்களுக்கு தெரிந்த பழமொழியையும் கூறுங்கள் நண்பர்களே...

32 comments:

 1. அருமையான தொகுப்பு.நல்ல அருமையான விளக்கம்.

  "பந்திக்கு முந்து படைக்கு பிந்து"
  இதை நான் வேறு விதமா புரிஞ்சு வச்சி இருந்தேன் : )

  ReplyDelete
 2. வாங்க வானம்பாடிகள் சார்...

  தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி...

  ReplyDelete
 3. வாங்க கபிலன்...

  தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி...

  ReplyDelete
 4. 'போதாக்குறைக்குப் பொன்னம்மா'ன்னு நானும் ஒன்னு சொல்லி வைக்கிறேன்.

  எங்க கோபாலுக்குப் பழமொழி புத்தகம் வேணுமுன்னு தேடித்தேடி நம்ம கி.வா.ஜ. தொகுத்த ஒன்னு தலையணை சைஸுக்கு ஒன்னு வாங்கி எடுத்துக்கிட்டுப் போனேன்:-)

  ReplyDelete
 5. பழமொழி. ஆழ்ந்து உணர வேண்டிய விஷயங்கள். நல்ல காரியம் தான் செய்துள்ளீர்கள் சங்கவி.

  ReplyDelete
 6. வாங்க துளசி கோபால்...

  தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி...

  ReplyDelete
 7. வாங்க ராஜலட்சுமி...

  தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி...

  ReplyDelete
 8. வாங்க ஸ்ரீ...

  தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி...

  ReplyDelete
 9. வாங்க தமிழ்உதயம்...

  தங்கள் கருத்துக்கும், வருகைக்கும் நன்றி...

  ReplyDelete
 10. கைப் புண்ணுக்கு கண்ணாடி எதுக்கு
  கைபுண் அல்ல"கைப்பூண்"அணியக்கூடிய ஆபரணம்,அதாவது கழுத்தில் அணியும் ஆபரணத்தைப் பார்க்க கண்ணாடி அவசியம்.ஆனால் கையில் அணியும் பரணத்தைப் பார்க்க கண்ணாடி தேவையில்லை நம் பக்கத்திலிருக்கும் மனிதனைத் தெரிந்துகொள்ள அல்லது புரிந்துகொள்ள மூன்றாவது மனிதன்க் கேட்க வேண்டிய அவசியமில்லை என்பதே இதன் உட்கருத்து.

  .....இதுதான் உண்மையான அர்த்தமா? நன்றி. இன்னும் சொல்லுங்க.

  ReplyDelete
 11. இன்னும் வரட்டும்

  ReplyDelete
 12. எல்லா பழமொழியும் அருமை சங்கவி ஆனா சிறுவர் வீட்டு வெள்ளாமைதான் மனசுல நிக்குது

  ReplyDelete
 13. நல்ல விளக்கத்தோட அருமையான தொகுப்பு.சில பழமொழிகளின் அர்த்தம் புரிந்துகொண்டேன்.
  நன்றி சங்கவி.

  ReplyDelete
 14. வாங்க சித்ரா வாங்க...

  இது தான் உண்மையாக அர்த்தம்....

  ReplyDelete
 15. வாங்க நசரேயன்...

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

  ReplyDelete
 16. வாங்க thenammailakshmanan...

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

  ReplyDelete
 17. வாங்க ஹேமா....


  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

  ReplyDelete
 18. அலுப்பு தட்டாமல் அறிந்துக் கொள்ளும் ஆர்வம் படிக்க படிக்க...சாமார்த்தியசாலி நீங்க நிகழ்வுகளை நல்ல பதிவுகளா மாத்திடறீங்க.....

  ReplyDelete
 19. வாங்க தமிழரசி...

  தங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...

  ReplyDelete
 20. miga arumai.. koviayil entha idam.. enathu mamanaar veedu Vadavalli. aduta murai varum poluthu santhipom

  ReplyDelete
 21. //சிறுவார் வீட்டு வெள்ளாமை வீடு வந்து சேராதாம்//
  ...'சிறுவார் வீடு' ன்றது என்னங்க ?

  ReplyDelete
 22. வாங்க LK

  கோவையில் என் அலுவலகம் இலட்சுமி மில் சந்திப்பு வீடு பேரூர்... நீங்க கோவை வந்தால் சொல்லுங்க நிச்சயம் சந்திப்போம்...

  ReplyDelete
 23. வாங்க கதிரவன்

  அது சிறுவார் வீடு இல்லைங்க... அந்த பழமொழியின் அர்த்தம் சிறியவர்கள் அவர்கள் சம்பாரிக்கும் பணத்தை சரியாக வீட்டிற்கு தரமாட்டார்கள் ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள் என்பதை விளக்குகிறது...

  ReplyDelete
 24. நிறைய கேள்வி பட்டிருந்தாலும் நாம் பேச்சு வழக்கில் உபயோகப் படுத்துவதில்லை. நல்ல தொகுப்பு, விளக்கங்கள்.

  ReplyDelete
 25. ஆகா,... நல்ல தொகுப்பு பகிர்வுக்கு நன்றி நண்பரே

  ReplyDelete
 26. சங்கவி நல்ல பதிவு, தெரிந்த பழமொழிகள் தான் அதை தொடுத்து கொடுத்த விதம் அற்புதம்.

  ReplyDelete
 27. தை பிறந்தால் வழி பிறகும்

  தை மாசத்தில அறுவடை முடிஞ்சிடும். அதனால வயலுக்கு நடுவுல இருக்கற வழி கரெக்டா தெரியும்.. இதன் இது சரியான அர்த்தம்

  ReplyDelete
 28. ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தாலும், அருமையான விளக்கங்களோடு நல்லாத்தான் தொகுத்திருக்கீங்க.

  பழம்மொழிகளை, பழமொழிப்பாட்டியிடம் கேட்டு இன்னும் போடுங்க.

  ReplyDelete